Om Nakkirar
மேனாட்டு ஆங்கிலப் புலவர்களின் வரலாறுகளைப் பல ஆராய்ச்சி வல்லுநர்களைக் கொண்டு எழுதுவித்து லார்டு மார்லி துரைமகனார் வெளியிட்டுள்ளனர். அங்ஙனமே, தமிழ்ப் பெரும் புலவர்களின் வரலாறுகளை, அவர்களின் நூலாராய்ச்சிகளுடன், அறிவிற் பெரியவர்களைக் கொண் டெழுதுவித்து, வெளிப்படுத்த வேண்டுமென்பது நம் தமிழ்ச் சங்க நோக்கங்களிலொன்று. இதனைத் தொடங்குவதற்குச் சில ஆண்டுகளின் முன்னரேயே ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும், ஆங்கிலப் புலவர் வரலாறுகளைப்போலத் தமிழ்ப் புலவர் வரலாறுகளை எளிதிற் றுணிதற்குப் போதிய துணைக் கருவிகளின்மையானும், பிறவற்றானும் அதனை நிறைவேற்றுவதில் காலந் தாழ்த்த நேர்ந்தது.
Visa mer