Om Kalidasa Sarithiram
வடமொழியில் மகாபாரதத்தில் உள்ள கிளைக்கதை பலவற்றுள் ஒன்றைப் பெருங்கதையிற் பிரித்து, தமிழிலும் ஆங்கிலத்திலும் சந்திரகாசன்கதை எழுதினார் சிலர். வடமொழிக் கிளைக்கதையை முதனூலெனின் இக்கதைகளை வழி நூலெனல் பொருந்தும். இப்பொழுது யான் எழுதுவது நாடகவடிவம் அமைந்துள்ளது. இதற்கேற்பக் கதையைத் திரித்தும் விரித்தும் எழுதியுள்ளேன். இந்நாடகத்தில்வரும் சம்பா ஷணைக்கெல்லாம் முதனூல் வழி நூல்களில் ஆதாரம் இல்லை. இவையெல்லாம் கதைக்குப் பொருந்துமாறு யானே எழுதியவை. இப்படி யான் செய்ய எனக்கு அதிகாரம் அளித்தவர் காளிதாச மகாகவியும் மதங்கசூளாமணியும். இதுகாறும் நான் தமிழில் எழுதிய நூல் இயற்றமிழ் நூல். இதுவே நாடகத் தமிழில் நான் பிரசுரஞ்செய்யும் முதல் நூல். இயற்றமிழ் நூவ் ஏலாதன நாடகத்தமிழ் நூலில் வரலாம்.
Visa mer